திறமையாக படிக்க 15 வழிகள் - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday, 1 July 2018

திறமையாக படிக்க 15 வழிகள்

திறமையாக படிக்க 15 வழிகள்

ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். படிக்க வேண்டிய பாடங்கள் மலை போல குவிந்து விடுவதை அது தவிர்க்கும் எதையும் நாளைக்கு என தள்ளி போட வேண்டியது இருக்காது.
ஒரு நாளில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை பிராக்டிக்கலாக முடிவு செய்யுங்கள். கடினமான பாடங்களை முதலில் படியுங்கள் சோர்வடையும் நேரத்தில் சுலபமான விஷயங்களை படியுங்கள்.

எதையும் புரிந்து கொண்டு படியுங்கள். புரியாதவற்றை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள கூச்சப்படாதீங்கள். புரிந்த பிறகு படித்தால் படித்தது குறுகிய நேரத்தில் மனத்தில் பதியும்.
ஒரு பாடத்தை படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிடுங்கள் அந்த கணக்கை வைத்து கொண்டு புத்தகத்தில் இருக்கும் எல்லா பாடங்களுக்கும் சரியான நேரம் ஒதுக்கி படியுங்கள்.கடினமான பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்.எப்படி திட்டமிட விட்டாள் சில பாடங்களை படிக்காமலேயே தேர்வுக்கு போக வேண்டியதிருக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒரு சப்ஜெக்டை படிக்க உட்காரும் போது அந்த சப்ஜெக்ட்டில் நேற்று படித்த பாடத்தை 10 நிமிடங்களுக்கு புரட்டி பார்த்து அசை படுங்கள்.இது எந்த பாடத்தை உங்கள் நினைவில் தக்க வைதப்பதர்கு உதவும். பொது தேர்வின் போது குறைந்த நேரத்தில் ரிவிஷன் செய்து முடித்த இந்த பழக்கம் உதவும்.
எந்த விஷயமும் நாம் ஞாபகத்தில் எவ்வளவு சதவிகிதம் தக்க வைக்கப்படுகிறது தெரியுமா? நாம் படிப்பதில் 10%, கேட்பதில் 20% முதல், பார்ப்பதில் 30%, பார்த்து கேட்பதில் 50%, ஒரு விஷயம் பற்றி நாம் மற்றவருடன் பேசினால் அது 70%, நாம் நேரடியாக எதிர்கொள்ளும் அனுபவங்கள் 80% நாம் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது 95%, எனவே படிக்கும் பாடங்கள் பற்றி சக நண்பர்களோடு பேசுங்கள் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

முடிந்தவரை பகல் நேரத்தில் படியுங்கள். இரவில் உங்கள் மூளையில் தக்க வைக்கும் திறன் குறைகிறது இரவில் ஒன்றை மணி நேரம் படிக்கும் பாடத்தை பகலில் ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம்.
50 நிமிடங்களில் படித்தால் 10 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடங்கள். கை கால்களை உதறி விட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். வயிற்றுக்கு உபத்திரவம் தராத பிஸ்கட், நொறுக்குத்தீனி ஏதாவது சாப்பிடுங்கள் அந்த பத்து நிமிடங்களில் பாடத்தைப் பற்றி நினைக்காதீர்கள். இப்படி ஓய்வெடுப்பது உங்கள் மூளைக்கு புத்துணர்வை தருகிறது நீங்கள் படித்த விஷயம் மனதில் பதிவதற்கு இந்த இடைவெளி உதவுகிறது.
பழக்கம்தான் ஒரு விஷயத்தில் எவரையும் நிபுணர் ஆக்குகிறது. பியான, வயலின், கிரிக்கெட் என எல்லாமே தினம் தினம் சில மணி நேரங்கள் பழகி பார்ப்பதன் மூலமே எவருக்கும் கைகூடுகிறது. படிப்பு அப்படித்தான் தினமும் நேரம் ஒதுக்கி திரும்பத் திரும்ப படிப்பதன் மூலமே கல்வி கைகூடும்!

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க உட்காருவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்படி பழகினால் அந்த நேரம் வந்ததும் நீங்களாகவே புத்தகத்தை தேடி போவீர்கள்.
உங்களுக்கு நீங்களே இலக்குகளை தீர்மானித்துக் கொண்டு படியுங்கள். வேதியல் பாடமா? இன்று மாலை படிக்க உட்கார்ந்தால் இரண்டு மணி நேரத்தில் 20 பக்கங்களை முடிக்க வேண்டும் என இலக்கு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்களால் முழுமையாக படிக்க முடியாது.
எனக்கு இயற்பியல் பிடிக்கும் எனக்கு கணிதம் சுத்தமாக பிடிக்கவில்லை....என விரும்பும் எதிர்பும் பார்க்காதீர்கள். விரும்பிய பாடத்தை மட்டுமே அதிகம் நேரம் படிப்பது மற்றும் பாடங்களில் மதிப்பெண்களை இழக்க செய்துவிடும்.
பாடங்களை ரிவிஷன் செய்வது ஒரு கலை. படத்தை நடத்திய அன்று ஒரு முறை ரிவிஷன் செய்யுங்கள் அந்த வார இறுதியில் இரண்டாவது முறை ஒரு ரிவிசன் கழித்து மூன்றாவது முறை, ஒரு மாதம் கழித்து, நான்காவது முறை அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ரிவிஷன். இப்படியே படிக்கும் பாடம் அழுத்தமாக மனதில் பதியும் முறையாக ரிவிஷன் செய்யாவிட்டால் படித்தது மறந்து விடும்.
தொடர்ச்சியாக பல மணி நேரங்களுக்கு ஒரே பாடத்தை படிக்காதீர்கள். நிறைய விஷயங்களை ஒரே நேரத்தில் மூலையில் திணிக்காமல், சின்ன சின்ன தகவல்களாக தரும் போது மூளைக்கு வேலை சுலபமாகிறது. ஒரு பாடத்தை படித்து விட்டு விடுங்கள், பிறகு வேறு சப்ஜெக்டுக்கு தாவுங்கள்.

உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டி கொள்ளுங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடித்தீர்களா... மாதிரி கேள்வித்தாளை பார்த்தும் விடைகள் மளமளவென நினைவுக்கு வருகிறதா.... உங்கள் முதுவில் தட்டி கொடுத்து கொள்ளுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் அடுத்தடுத்த நாட்களில் ஈசியாக படிக்க வைக்கிறது.

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages