சீர்பெற வந்த
சித்திரைப் பெண்ணே...
அமுதச் சோறிட்டு
அகிலம் காத்த வேளாளர்
பெருங்குடி தன் வியர்வை
முத்துக்களே உரமெனத் தாங்கும்
தமிழ் நிலத்தில்
ஏற்றமிகு வாழ்வின் ஏந்தல்களாய்
காதல், வீரமெனும் பண்பிரண்டால்
மாண்புற வளர்த்த மானங்காத்து
மரணமே என்றாலும்
தோள் தட்டி மார்தட்டும்
மறக்குடி தமிழ் நிலத்தில்
அலையூறும் சுழியிட்ட
காவிரி நல்லாள் சிறைபட்டாள்...
சிங்களத்தான் வெறியாடித்
தொலைத்திட்ட நம்மினத்தின்
எச்சத்தை மிச்சமென விட்டிடல்
ஏதமென்று எட்டப்பர் பலர் கூடி
சதித் திட்டம் போட்டது போல்
உயிருக்கு உலை வைக்கும்
அணுத் திட்டம் ...
நஞ்சினை உமிழ்கின்ற
அறிவியல் பல திட்டம்
பாங்காய் வகுத்திட்டு
பாலிலே நஞ்சினை
தோதாய் கலந்திட்டு ....
பலம் பெறுவாய்
பசியாற பருகுவாய் ... .
என்றெல்லாம்
பசப்புறு வார்த்தைகளால்
பாசாங்கு செய்யும்
குள்ள நரி வஞ்சகர் தம்
பகை நடுவே....
போர்ப்பறை முழங்க
தானைத் தமிழர்
பேரொலி ஆர்க்கும்
பாசறை கொண்ட
தமிழ் நிலத்தில் ....
பகைவர் வேரறுக்க
சாப்பறை முழங்கும்
தமிழ் நிலத்தில்
வாயூறும் வண்ணக்கனிகள்
பல கொண்டு
தாயூறும் அன்பின்
சால பரிந்தூட்ட
சீர் பெற வந்த
சித்திரைப் பெண்ணே
வருக ....
சித்திரைப் பெண்ணே...
அமுதச் சோறிட்டு
அகிலம் காத்த வேளாளர்
பெருங்குடி தன் வியர்வை
முத்துக்களே உரமெனத் தாங்கும்
தமிழ் நிலத்தில்
ஏற்றமிகு வாழ்வின் ஏந்தல்களாய்
காதல், வீரமெனும் பண்பிரண்டால்
மாண்புற வளர்த்த மானங்காத்து
மரணமே என்றாலும்
தோள் தட்டி மார்தட்டும்
மறக்குடி தமிழ் நிலத்தில்
அலையூறும் சுழியிட்ட
காவிரி நல்லாள் சிறைபட்டாள்...
சிங்களத்தான் வெறியாடித்
தொலைத்திட்ட நம்மினத்தின்
எச்சத்தை மிச்சமென விட்டிடல்
ஏதமென்று எட்டப்பர் பலர் கூடி
சதித் திட்டம் போட்டது போல்
உயிருக்கு உலை வைக்கும்
அணுத் திட்டம் ...
நஞ்சினை உமிழ்கின்ற
அறிவியல் பல திட்டம்
பாங்காய் வகுத்திட்டு
பாலிலே நஞ்சினை
தோதாய் கலந்திட்டு ....
பலம் பெறுவாய்
பசியாற பருகுவாய் ... .
என்றெல்லாம்
பசப்புறு வார்த்தைகளால்
பாசாங்கு செய்யும்
குள்ள நரி வஞ்சகர் தம்
பகை நடுவே....
போர்ப்பறை முழங்க
தானைத் தமிழர்
பேரொலி ஆர்க்கும்
பாசறை கொண்ட
தமிழ் நிலத்தில் ....
பகைவர் வேரறுக்க
சாப்பறை முழங்கும்
தமிழ் நிலத்தில்
வாயூறும் வண்ணக்கனிகள்
பல கொண்டு
தாயூறும் அன்பின்
சால பரிந்தூட்ட
சீர் பெற வந்த
சித்திரைப் பெண்ணே
வருக ....
Athour
kongu school, uthukuli,TIRUPUR,
TAMIL TEACHER
Rajkumar
No comments:
Post a Comment