வார்த்தைகளை மட்டும்
சுமப்பவள் நீயல்ல ....
வண்ணங்கள் உனக்குண்டு
ஆனால் அதுவே
உன் எண்ணமல்ல ....
அறிவோடு அழகும்
உனக்குண்டு ஆனால்
அவ்வளவாய்ப் பெருமையில்லை...
மணக்கின்ற மலரும்
மணிக் கழுத்தைச் சேர்கின்ற
நகை மணிகளும்
எழில் வண்ண ஆடையும்
பூட்டிய இழையணிகளும்
இன்ன பிறவும் ஒன்றி ஒய்யார
நடையிட்டு வந்தாலும்
கவிதையே....
தமிழ்ப்பெண் போல்
மொழிக்கப்பால் வழியும்
உணர்வொன்று உண்டு ....
பண்பட்டப் பாதைகளாய்
விரிந்து செல்லும் வாழ்வை
தன்னை ஈந்து
செப்பனிட்டுச் செல்லும்
தமிழ்ப்பெண் போல்
உணர்வொன்றே உன்னை
வாழச் செய்யும் .....
வையமதில் கவிதைப் பெண்ணே..
வாழ்வாங்கு வாழச் செய்யும்...'
- ந.இரா.இராசகுமாரன்.https://m.facebook.com/story.php?story_fbid=800994493434374&id=100005714921722
No comments:
Post a Comment