குவியும் மின் குப்பை - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday 1 July 2018

குவியும் மின் குப்பை


குவியும் மின் குப்பை
நன்றாக இயங்கும் போது பழைய செல்போனையயோ டெலிபோன் ஐயோ தூக்கி எறிந்துவிட்டு வாங்கும் பலருக்கும் நாம் மின் குப்பையை உருவாக்கி இருக்கிறோம் என்ற உணர்வு இருப்பதில்லை.'எக்ஸேஞ்ச் அக்பர்' என்ற பேரில் பழைய பொருட்களை வாங்கிக்கொண்டு நிறைய நிறுவனங்கள் புதிது தருகின்றன ஆனால் இப்படி அவர்கள் வாங்கும் பழைய பொருட்களை உடைத்து குப்பையாக அனுப்புகிறார்கள். இந்தியாவில் இப்படி சேரும் மின் குப்பையில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே நிறுவனங்களில் முறைப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது என அதிர்ச்சி புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான அசோசேம் இந்த அலுவகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எலக்ட்ரானிக் குப்பைகளை பாதுகாப்பாக செய்து தேவையை தேவையானவை பயன்படுத்திக் கொள்ளவும் தேவையற்ற இதை முறையாக அப்புறம் செய்துவிட வேண்டும் இல்லையெனில் மோசமாகிவிடும். கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் சுமார் 18 லட்சம் 10 மின் குப்பைகள் சேர்ந்தன.
ஒவ்வொரு ஆண்டும் இது 30 சதவீதம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. உலகில் அதிகம் மின் குப்பைகளை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மீன் குப்பைகளில் பாதரசம், காட்மியம், யுரேனியம் உள்ளிட்ட ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மூளையின் வளர்ச்சியை பாதிக்கின்றன.
ஆனால் மீன் குப்பைகளை உடைத்து பிடிக்கும் பணிகளில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகள் இந்தத் தொழிலில் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறேன். மின் குப்பைகளை பிரிக்கும் பணியில் இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சுவாச கோளாறுகள் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தனிநபர் கணக்கின்படி பார்த்தால் உலகிலேயே அதிகம் மின் குப்பைகளை உருவாக்குவார்கள் நார்வே மக்கள்தான். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 28 கிலோ மீன் குப்பையை உருவாக்குகின்றனர். சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் இது 26 கிலோவாக இருக்கிறது. நார்வே, சீடன், பின்லாந்து, போன்ற நாடுகள் தங்கள் மின் குப்பைகளில் 50 சதவீதத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றன. இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது இந்த நிலை மாறுபட வேண்டும். நன்றி!!! வாழ்க வளமுடன்!!!

1 comment:

Anonymous said...

சூப்பர்

Post Bottom Ad

Responsive Ads Here

Pages