வெற்றியைத் தரும் 10 வழிகள்.... - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Thursday 5 July 2018

வெற்றியைத் தரும் 10 வழிகள்....


வெற்றியைத் தரும் 10 வழிகள்.... 

வேகமாக கற்றுக்கொள்ளுங்கள்

பாடப்புத்தகங்கள் முக்கியம். அதோடு, உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து, தினமும் குறைந்தது 15 பக்கங்கள் வாசியுங்கள். இன்று கற்றுக் கொண்ட விஷயம் என்ன ஏதாவது ஒன்று தினமும் இருக்க வேண்டும். புதிய விஷயங்கள் புத்தகங்களில் கிடைக்கும் அதோடு அவற்றில் புதிய வார்த்தைகள் அர்த்தம் கண்டுபிடித்து, அவற்றை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துங்கள்.






கற்பனை செய்யுங்கள்

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விஷயங்கள் பற்றியும் இனிமையான மற்றும் திறமையான கற்பனைகளை செய்யுங்கள். 'பள்ளிக்கு வேனில் செல்வதா... சைக்கிளில் செல்வதால்?' என்று குழப்பம் இருந்தால் இரண்டிலும் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை செய்து பாருங்கள். எது நன்றாக இருக்கிறதோ அதை பின்பற்றுங்கள். தேர்வுகள் மேற்படிப்புகள் பள்ளிப்பாடங்களை விஷயங்கள் என எல்லாவற்றிலும் இப்படி கற்பனை செய்வது. புதிய பாதைகளை உங்களுக்கு காட்டும் இந்த கற்பனையில் எது நமக்கு நன்மை என்பது முக்கியம்.

வெற்றி தரும் 10 பழக்கங்கள

முன்னுரிமைகளை முடிவு செயுங்கள்

ஒவ்வொரு நாளிலும் இன்று எதை செய்வது முக்கியம் அதை முதலில் செய்ய வேண்டும் என முன்னுரிமைகளை முடிவு செய்யுங்கள். ஒவ்வொன்றையும் செய்து முடிக்க வேண்டிய நேரத்தையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதனால் வேகமாக வேலைகளை முடிக்க முடியும். ஒருநாள் உங்களுக்கு பள்ளியில் தேர்வு அறிவித்திருப்பார்கள் அதே நேரத்தில் நண்பர்கள் விளையாடவும் அழைத்திருப்பார்கள். எது முக்கியம் என்று தீர்மானித்து அதை பின்பற்றுங்கள். எது முக்கியம் என்று தீர்மானித்து அதை பின்பற்றுங்கள்.

அதிகாலையில் எழுந்து விடுங்கள்

தினமும் காலையில் நீங்கள் எழும் நேரத்தை விட அரை மணி நேரம் சீக்கிரமாக எழுந்திருப்பது என்று தீர்மானித்துக்கொளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு செலவழிப்பதற்கு அரை மணி நேரம் கூடுதலாக கிடைக்கும். இப்படி ஓராண்டில் கிடைக்கும் சுமார் 180 மணி நேரம் என்பது மற்றவர்களை விட உங்களுக்கு கூடுதலாக உழைக்கும் கற்றுக்கொள்ளும் ஒரு வார காலத்தை கூடுதலாக கொடுக்கிறது.

இலக்குகளை எழுதி வையுங்கள்

எனது இலக்கு இதுதான் என்று எழுதி வையுங்கள் இதை உங்கள் கண்களில் படிக்கிற மாதிரி ஏதாவது ஒரு இடத்தில் வைத்திருங்கள். அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுங்கள் அரையாண்டு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது உங்கள் இலக்காக இருந்தால் அதை ஒரு நோட்டில் எழுதி அதற்கு கீழே அதை அடைவது எப்படி என்று திட்டங்களை எழுதுங்கள். இப்படி எழுதி வைத்து இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் மற்றவர்களை விட 50% வேகமாக இலக்கை அடைகிறார்கள்.

உடற்பயிற்சியும் உணவும் அவசியம்

தினமும் உங்கள் உடலில் வியர்வை வரும் அளவிற்கு ஏதேனும் ஒரு உடல் உழைப்பு செயல் இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யலாம், சைக்கிள் ஓட்டுவது, ஓட்டம், விளையாட்டு என ஏதேனும் ஒன்று அவசியம் உடலுக்கு உழைப்பு தருறுவது போலவே சத்தான உணவும் அவசியம். இந்த இரண்டும்தான் உங்களுக்கு எனர்ஜியை தரும்.

பண நிர்வாகம் முக்கியம்

சின்ன வயதிலேயே பணத்தின் மதிப்பை பெற்றோரிடமிருந்து கற்று கொள்ளுங்கள். செலவுகளில் இதை வெளிப்படுத்துங்கள். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே எப்படி செலவு செய்வது என்பதை கற்றுக் கொள்ளும் போது சேமிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.

பலம் உணருங்கள்

உங்களின் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் உணருங்கள். உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ எதில் திறமை அதிகமோ அதை வளர்த்துக் கொள்ள உங்கள் நேரத்தில் ஒரு பங்கை செலவிடுங்கள்.

நண்பர்களை சம்பாதியுங்கள்

அனைவரிடமும் ஜாலியாக பேசி பழகுங்கள். மதிக்கவும், உதவிகள் செய்யவும், கற்றுத் தரவும் எப்போதும் தயாராக இருங்கள். நல்ல நல்ல செய்திகளையும் சிந்தனைகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.  இலக்கை நோக்கி பயணத்தில் நண்பர்களின் உதவி முக்கியம்.

விதிகளை வகுத்துக் கொள்ளுங்கள்

"எப்படியும் வாழலாம்" என்று பலர் இருப்பார்கள் "இப்படித்தான் வாழவேண்டும்" என தங்களுக்கு விதிகளை வகுத்து கொள்பவர்களே எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்." நான் இப்படித்தான் இருப்பேன். இந்த எல்லாப் பழங்களின் கலவை தான் நான்"என உங்களுக்குள் சில குணாதிசயங்களை வரையறுத்துக் கொள்ளுங்கள்." யாரையும் கிண்டல் செய்து நான் சிரிக்க மாட்டேன் "," கொடுத்த வேலையை காலம் தாழ்த்தாமல் சொன்ன நேரத்திற்குள் முடிப்பேன்" என நேர்மையான விதிகளைப் பின்பற்றுங்கள். இவையே உங்கள் மீதான நம்பிக்கையை அதிகமாக உருவாக்கும்.

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages