நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது தவறு. பகலில் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. தமிழில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் அருந்தலாம். குடிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை கட்டிப் போட்டு வைக்கலாம். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் முடியும்.
'ஐஸ் காபி' 'ஐஸ் டீ' போன்ற பானங்கள் கோடை காலத்திற்கு உகந்தது அல்ல. தள்ளியே நிற்பது நல்லது. இளநீர் மோர் எலுமிச்சை பழச்சாறு என பாரம்பரிய இயற்கை பானங்களை நாடுங்கள். இளநீரும் பழனி நுங்கும் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தி கொடுக்கும்.
நீராகாரம் இனிமையான இயற்கை பானம் காலையில் தண்ணீருக்கு பதிலாக அதை அருந்தலாம்.
மண்பானையில் நீர் வைத்து குடிப்பவர்கள் அதில் துளசி இலைகளைப் போட்டு பழங்கள் உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது நல்லது.
மதிய உணவில் அதிகம் கிராம், புளி சேர்க்கக்கூடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்களை சாப்பிடுவது நல்லது பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள கொள்ள வேண்டும். வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தாள் நலம்.
ஒருவேளை உணவுகளுக்கு இடையில் காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம். கேரட், வெள்ளரிக்காய், தேங்காய், தக்காளி... இவற்றை வட்ட வடிவமாக அரிந்து உப்பு மிளகுத்தூள் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடலாம்.
கொத்துமல்லி இஞ்சி மிளகு ஆகியவற்றை உணவில் சேர்ப்பது குளிர்ச்சியை ஊட்டும்.
நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு திராட்சை என சாப்பிடலாம்.
காய்கறியில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. ஆனால் தாங்க வில்லை என்று தெருவில் விற்கும் குச்சி ஐஸ் போன்ற ஐஸ்களை வாங்கி சாப்பிடாதீர்கள். அது உடலின் வெப்பத்தை அதிகரிப்பதுடன், கண் நோய்களைத் தந்து செல்கிறது. கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைந்து பரவும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
No comments:
Post a Comment