அங்காத்த லோசைக்கு
'அ' வென்ற வடிவாம்...
ஆருயிர் ஈந்திட்ட
அப்பனே அகர மென்றால்
தப்பாது அங்காத்தல்
உயிர்களுக் கன்றோ...?
மூக்கினுள் இடமாய்
முழங்கிடும் மூச்சதுவும்
மகர வடிவாய்
மயங்கியே நிற்பது
அன்பென்ற அம்மையின்
திருவுருவா யன்றோ ..?
கொடையாகக் கொடுப்பது
உயிரே வென்றாலும்
உவப்புடன் ஈந்துவக்கும்
முத்தமிழ்க் குடிப்பெருமை
மெய்யாலே தாங்கி நிற்கும்
யகரமும் வகரமும்
உடன்படும் வழக்கெல்லாம்
உற்றார் உறுதுன்பம்
தோள்தாங்கும் நட்பின்
தமிழ் வழக்க மன்றோ?
யானிருக்க நீயிருப்பாய்...
என்னருகே நீயென்றும்
பிரியாமல் முன்நிற்க
பிணைந்தே நான்பின் வருவேன்...'
கைபிடித்த கணவன் யானிருக்க
கலங்காது நீயிருப்பாய்
காலமெல்லாம் என்னகத்தே ... '
என்றறையும் தமிழ்
இல்லற மாண்பினை இணைந்துறையும்
நகரமும் தகரமும் காட்டுமன்றோ ...?
இடையினமா யிருந்தாலும்
வல்லினமோ மெல்லினமோ
எவ்வினமும் தழீஇச் செல்லல்
இயல்பன்றோ....?
இயல்பாய் வாழ்வதே வழ்வென்றே
வழக்கமாய் வருகின்ற தமிழுக்கு
'ழ' கரச் சிறப்பு
முடியணிச் சிறப்பன்றோ..?
இவை... இவை... போலும்
சிறப்புகள் பலகொண்டு
எண்ணும் எண்ணங்கள்
எண்ணும்படி ஏட்டில் வடித்திட
உணர்விலே .... உயிரிலே....
மூச்சிலே ... பேச்சிலே ...
சொல்லிலே கலந்துவரும்
எழுத்தன்றி பிறஎழுத் தெல்லாம்
தூய தமிழ்எழுத் தாகுமா...?
Athour
kongu school, uthukuli,TIRUPUR,
TAMIL TEACHER
Rajkumar
2 comments:
what the about site?
hehehe im from publisher95.xyz
thanks
Thanks for comment. Our site about tamil content.
Post a Comment